வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவைக்கு உங்களை வரவேற்கிறோம்
கணினிமூலமாக ஒதுக்கீடு செய்யவும்.
வனவிலங்கு துறை தங்கள் வனவிலங்கு சரணாலயங்கள்/ பூங்காக்கள் முகாமைத்துவத்தின் கீழ் பல வனவிலங்கு பங்களாக்கள் கொண்டுள்ளன. இந்த வசதிகளை பொது மக்களுக்கு ஒதுக்க மற்றும் பயன்படுத்த முடியும்.
வசதிகளை தற்போதைய மற்றும் அடுத்த மாதத்துக்கு ஒதுக்கீடு செய்ய முடியும்.
ஒவ்வொரு வசதிக்கும் அதிகபட்ச தங்கும் எண் ஒன்று உள்ளது. ஒரு நபரால் மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
மின்னணுவியல் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம்களை செலுத்த முடியும்.
ஒதுக்கீடு நிலமையை சோதிக்கவும்
இந்த e-சேவை மூலம் ஒதுக்கீடு செய்துள்ள ஒருவருக்கு அவன் / அவள் செய்த இடஒதுக்கீடை சரிபார்க்க முடியும். இதன் மூலம் ஒதுக்கீட்டுக்கான உரிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய மற்றும் இடஒதுக்கீட்டுக்கான விவரங்களை உறுதி செய்ய முடியும்.
DWC RES {தேசிய அடையாள அட்டை எண் } { ஒதுக்கீடு குறிப்பு எண்} என type செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் பயனருக்கு உறுதிப்படுத்தல் SMS ஐ பெற முடியும்.
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் இயக்கப்படுகிறது
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவைக்கு வரவேற்கிறோம்.
இந்த சேவை வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் வசதியை மற்றும் உங்கள் முந்தைய ஒதுக்கீடுகளின் தற்போதைய நிலமையை பார்க்கும் வசதியை வழங்குகிறது.
வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவை
உங்களது ஒதுக்கீட்டினை பூர்த்தி செய்வதற்கு பின்வரும் செயல்கள் மூலம் செல்ல வேண்டும்.
கிடைக்கும் தன்மையை சோதிக்கவும்
விரும்பிய பங்களாவை கிடைக்கிறதா என்று சோதிக்க அனுமதிக்கிறது.
இணையான பதிவு செய்தல்களை மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன ஆகையால் இந்த நாட்களில் ஒதுக்கீடு செய்ய தயவு செய்து முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடைய இல்லையா என்பதை 10 நிமிடங்கள் கழித்து புதுப்பித்து பார்த்து ஒதுக்கீடு செய்யவும்.
தயவு செய்து பங்களாவை மற்றும் ஒதுக்கீடு தேதிகளை தேர்ந்தெடுத்து 5 நிமிடங்களுக்குள் ஒதுக்கீட்டை நிறைவு செய்யவும்.
ஒரு ஒதுக்கீட்டுக்கு 3 அதிகபட்ச தொடர்ச்சியான திகதிகள் அனுமதிக்கப்படுகிறது.
ஒதுக்கீடு செய்
நீங்கள் இதற்கு முன்னர் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் ஒதுக்கீடு செய்து இருந்தால், தயவு செய்து உங்களது அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு 'தேடல்' பொத்தானை மீது கிளிக் செய்து தகவல்களை பார்க்கவும்.
தேவைப்பட்டால் ஏற்கனவே இருக்கும் தகவல்களை உங்களுக்கு திருத்த அல்லது மாற்ற முடியும்.
ஒரே திகதிகளில் அதே தேசிய அடையாள அட்டை எண்ணுக்கு வேறு வசதியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களுக்கு ஒதுக்கி கொள்ளலை பூர்த்தி செய்ய முடியாது.
உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.
6 வயதுக்கு கீழே உள்ள இரண்டு குழந்தைகளை கட்டணம் இல்லாமல் குழுவுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை 2 க்கு அதிகமாக இருந்தால் மட்டுமே, உள்ளூர் குழந்தை ஒருவருக்கு(2-6 வயது) ஒரு எண் உள்ளிடவும்.
கட்டணம்
தேர்வு செய்யப்பட்ட வசதிக்கான குறைந்தபட்ச நபர்கள் எண்ணுக்காக கட்டணம் கணக்கிடப்படுவதோடு மேலதிக குடியிருக்கைக்கான தலை வீத விலை அடிப்படையில் குறைந்தபட்ச தொகையுடன் கூட்டப்படும்.
ஒதுக்கீடு செய்தலை உறுதிப்படுத்த கட்டணம் செலுத்தலை 10 நிமிடங்களுக்குள் பூர்த்தி செய்யவும். அல்லது ஒதுக்கீடு ரத்துசெய்யப்படும்.
மின்னணுவியல்(வீசா/ மாஸ்டர்) அட்டைகளை அல்லது eZcash பயன்படுத்தி கட்டணம்களை செலுத்த முடியும்
ஆன்லைனில் பணம் செலுத்துவதை அடிப்படையாக கொண்டு வசதிக்கான கட்டணம் ஒன்றை விதிக்கப்பட முடியும்
ஒதுக்கீடு நிறைவு செய்யவும்
உங்கள் பணம் செலுத்தல் மற்றும் ஒதுக்கி கொள்ளல் வெற்றிகரமாக இருந்தால், உங்கள் ஒதுக்கி கொள்ளல் பற்றிய விவரங்களை திரையில் காண்பிக்கப்படும்.
தயவு செய்து அனுமதிப்பத்திரம், SMS மற்றும் மின்னஞ்சலில் வழங்கப்படுகின்ற ஒதுக்கி கொள்ளல் குறிப்புரை எண்ணை எதிர்கால குறிப்பிற்காக குறித்துக்கொள்ளவும்.
ஒதுக்கி கொள்ளலை உறுதிப்படுத்தும் ஒரு மின்னஞ்சல் மற்றும் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.
நீங்கள் அனுமதிப்பத்திரத்தை மற்றும் பற்று சீட்டை அச்செடுத்தீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பூங்காவிற்கு நுழைவதற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயமாகும்.
VAT இறுத்தலுக்கு, தயவு செய்து "அசல்" என குறிக்கப்பட்ட முதல் அச்சுப் பிரதியை பயன்படுத்துவதோடு, அதனை பூங்கா காப்பாளரிடம் பூங்காவினுல் நுழையும் போது சான்றுபடுத்திக்கொள்ளவும்.
ஒதுக்கீடு நிலமையை சோதிக்கவும்
இந்த சேவை மூலம் ஒதுக்கீடு செய்துள்ள ஒருவருக்கு அவன் / அவள் செய்த இடஒதுக்கீடின் நிலமையை சோதிக்க மற்றும் ஒதுக்கீடுக்கான அனுமதிப்பத்திரத்தை/ பற்று சீட்டை அச்சிட முடியும். ஒதுக்கீடு குறிப்பு எண் மற்றும் தேசிய அடையாள அட்டை /கடவுச் சீட்டு /சாரதி அனுமதிப் பத்திர எண்ணை உள்ளிட்டு தகவல்கலை மீட்டெடுக்கவும்.
மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பார்க்கவும் மற்றும் 1919 ஐ தொடர்புகொள்ளவும்.